(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடுமையான பொருளாதார சரிவை சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகளில் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்து மூவின நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவயே சாரும்.
இவ்வாறு மாளிகைக்காடு பிரதேசத்தில் எதிர்கால இளையோரும் ஜனாதிபதி தேர்தலும் எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய மாளிகைக்காடு சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும்,முன்னாள் காரைதீவு பிரதேச சபை உதவி தவிசாளரும், திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.முஷாரப் அவர்களின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.ஜாஹிர் (7) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வாறு குறுகிய காலத்தில் ஸ்திர தன்மையை அடையவில்லை.
அறிவு,அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகள் அடிப்படையில் வீழ்ச்சியடைந்திருந்த எமது நாட்டை கட்டியெழுப்பிய
பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு உரித்தாகும்.
எதிர்காலத்தில் இந்த நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் தேவைகளை நன்கு அறிந்து அவர்களுக்கு துறைசார் நியமனங்களையும்
,தொழில் வாய்ப்புகளையும் வழங்க திட்டமிட்டுள்ளார்.
எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் நாட்டின் பொருளாதார ஸ்திர தன்மை உருவாக்கப்பட்டிருக்காவிட்டால், இந்த நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும், பலவிதமான மட்டங்களிலுமுள்ளோரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருப்பார்கள்.
எனவே எதிர் காலத்தில் இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் தகுதியும் தராதரமும் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரத்தை பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு இளைஞர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.என்று தெரிவித்தார்.
No comments: