News Just In

3/17/2026 04:23:00 PM

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!




குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் .

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர்.

இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம்கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

இப்புதைகுழி எதிர்வரும் 30 ஆம் திகதி அகழ்வாய்வுக்கு உட்படுத்த மன்று அறிவித்துள்ள நிலையில், இந்த விசேட கள விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: