
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின், தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, மட்டக்களப்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதியில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன இணைந்து இந்த அலுவலகத்தை திறந்துவைத்தன. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் புதிய அலுவலகத்தின் இணைப்பாளருமான எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட பலர்கலந்துகொண்டனர்
No comments: