News Just In

8/14/2024 01:31:00 PM

நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள பஸ் பிரயாணிகள் தரிக்கும் இடத்திற்கு அருகில் கொட்டப்பட்டுள்ள திண்மக்கழிவுகளால் பிரயாணிகளுக்கு சிரமம்!

நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள பஸ் பிரயாணிகள் தரிக்கும் இடத்திற்கு அருகில் கொட்டப்பட்டுள்ள திண்மக்கழிவுகளால் பிரயாணிகளுக்கு சிரமம்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

நிந்தவூர்- காரைதீவு பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள பஸ் பயணிகள் தரிக்கும் இடத்திற்கு சுற்றுப்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாக பிரயாணிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

பஸ் பயணிகள் தரிக்கும் இடத்திற்கு உள்புறமாவும் குப்பைகள் காணப்படுவதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பிரயாணிகள் அந்த இடத்தில் தரிக்காமல் சற்று தள்ளி நின்றே பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது.

பல மாதங்களாக அகற்றப்படாத இந்த திண்மக் கழிவுகளை காகம்,ஆடு, மாடு போன்றவை கிளறுவதால் துர்நாற்றம் மேலும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: