(அஸ்ஹர் இப்றாஹிம்.)
நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் நகரில் Swiss முறையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் புரோ நைட்ஸ் செஸ் அகடமி மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தனர்.
அதில் 10 வயது பிரிவில் 5 போட்டிகளில் ஐந்து வெற்றிகளையும் பெற்று முதலாவது இடத்தினை அஞ்சுலன் ஜெகனேந்திரன் எனும் மாணவனும், 13 வயது பிரிவில் மூன்றாவது இடத்தினை ஆரங்கன் ஜெகனேந்திரன் என்ற மாணவனும் வெற்றி பெற்று அடுத்து இடம்பெறுகின்ற தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்.
No comments: