News Just In

8/14/2024 07:03:00 PM

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மூன்று மொழிகளின் முக்கியத்துவம் பிரதிபலிக்கப்பட்டது!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் சிங்கள மொழி மூலமான விசேட காலை ஆராதனைக் கூட்டத்தில் தமிழ்மொழித்தினம் மற்றும் ஆங்கில தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் தாய்மொழியுடன் ஏனைய மொழிகளையும் தெரிந்திருப்பது எம்மிடமுள்ள பலம் பலமடங்கு அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. என்பதற்கிணங்க ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்காலை ஆராதனையானது பாடசாலையின் சிங்களப் பாடப் பிரிவு ஆசிரியர்களினால் நெறிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments: