இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் வடக்கு - கிழக்கின் செயற்பாடுகள் தொடர்பில் சந்திப்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், திருகோணமலை மாவட்ட அரசியல் செற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனையும் இம்ரான் மஹ்ரூப் சந்தித்திருந்தார்.இதன்போதும், தற்போதைய அரசியல் நிலைகுறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: