News Just In

8/25/2024 10:41:00 AM

20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குத்துச் சண்டையில் பெரிய பண்டிவிரிச்சான் வித்தியாலய மாணவன் சாதனை!

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துசண்டை போட்டியில் மடு கல்வி வலய மாணவன் விஜிதன் கபிலன் சாதனை.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்கு பற்றிய பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் குறித்த மாணவன் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments: