News Just In

7/21/2024 04:28:00 PM

அபிவிருத்தித் திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீட்டு ஆவணங்களைக் கையளித்தார் அலி சாஹிர் எம்.பி!




மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களைக் கையளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது.

பொது நிறுவனங்கள், பாலர் பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், பள்ளிவாயல்கள் போன்ற நிறுவனங்களுக்கான நிதிஒதுக்கீட்டு ஆவணங்களை பாரளுமன்ற உறுப்பினர் கையளித்தார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முபீன், காத்தான்குடி நகர சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஜெசீம் உட்பட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: