News Just In

7/12/2024 06:41:00 PM

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட செயலமர்வு!




மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை,கிளிநொச்சி, கொழும்பு, கேகாலை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து,விதிவிட செயலமர்வொன்று மட்டக்களப்பில் நேற்று மாலை முதல் நடைபெற்று வருகின்றது.

ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவனப் பணிப்பாளர் டிலானி பண்டர் தலைமையில், இவ் வதிவிட செயலமர்வு நடைபெறுகின்றது.தன்னாமுனை மியானி நகரில் இடம்பெறும் இச் செயலமர்வில், முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின், விசேட கல்வித் தேவைகள் கொண்ட மாற்றுத்திறன்
சிறுவர்கள் உள்ளிட்ட பாடசாலைகளின் அனைத்து பிள்ளைகளினது கல்வி மற்றும் பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் உள்ளடக்கியசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஓசியன் ஸ்டார் லங்கா நிறுவன உத்தியோகத்தர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்

No comments: