News Just In

7/12/2024 06:48:00 PM

பொலிஸ் நாய்கள் பிரிவில் 13 குட்டிகளை ஈன்ற நெதர்லாந்து பெண் நாய்கள்!


கடந்த வெள்ளிக்கிழமை (05) நெதர்லாந்தில் இருந்து இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட 35 உத்தியோகபூர்வ நாய்களில் இரண்டு பெண் நாய்கள் கண்டி, குண்டசாலையில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் தலைமையகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 13 குட்டிகளை ஈன்றது.

இதில் English Spanier வகையைச் சேர்ந்த Tempard என்ற பெண் நாய் 03 ஆண் மற்றும் 03 பெண் நாய்க்குட்டிகளையும், Lea என்ற பெண் நாய் 03 ஆண் மற்றும் 04 பெண் நாய்க்குட்டிகளையும் ஈன்றுள்ளன.

இந்த நாய்க்குட்டிகள் கண்டி குண்டசாலையில் அமைந்துள்ள அஸ்கிரிய பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ நாய் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கால்நடை வைத்தியர் அமல் திஸாநாயக்கவின் மேற்பார்வையில் ஆரோக்கியமாக உள்ளன.

நெதர்லாந்தில் இருந்து இந்த 35 உத்தியோகபூர்வ நாய்களை வரவழைக்க இலங்கை அதிக பணம் செலவழித்துள்ளதுடன், இரண்டு பெண் நாய்கள் 13 குட்டிகளை பிரசவித்ததன் மூலம் 25 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை சேமிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எதிர்காலத்தில், பொலிஸ் கடமைகளுக்காக உத்தியோகபூர்வ நாய்களை இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்துவதன் மூலம் உத்தியோகபூர்வ நாய்களின் விலையைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: