News Just In

7/12/2024 06:37:00 PM

மட்டக்களப்பு, சித்தாண்டியை சேர்ந்த பயனாளிக்கு இராணுவத்தால் வீடு!




மட்டக்களப்பு சித்தாண்டியில் அடிப்படை வசதிகளற்ற வீடொன்றில் வசித்து வந்த குடும்பத்தினரின் நலன் கருதி, இலங்கை இராணுவத்தின் கட்டட நிர்மாணப் பிரிவால், வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது.
வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மாத்தாளையைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளரால், வீட்டுத் திட்டத்திற்கென 1.4 மில்லியன் ரூபாவழங்கப்பட்டுள்ளது.சித்தாண்டி 3 ஜச் சேர்ந்த 3 பிள்ளைகளைச் கொண்ட மா.செல்லத்துரை குடும்பத்தினரே பயனாளிகளாகத்தெரிவாகினர்.

கிழக்கு கொமாண்டர் பாதுகாப்பு படை மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்கவின் ஒருங்கிணைப்பின் கீழ், 23 ஆவது காலால் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யு.பி.காரியவசம், பிரிகேடியர் ஆ.பி.எஸ்.பிரசாத் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ்,4 ஆவது இராணுவப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர்.எஸ்.பி.ஜ.எச்.சேனநாயக்கவின், மேற்பார்வையில் வீடுநிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் 232 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரசாத் சந்துனு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.செங்கலடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments: