News Just In

7/21/2024 07:24:00 PM

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்!





எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ரோ புலனாய்வு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வெளியிட்ட அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் பிரகாரம் இரண்டாவது இடத்தில் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாவது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் அசோக அபேசிங்க கூறியுள்ளார்

No comments: