News Just In

7/19/2024 05:09:00 PM

பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு ஒலுவிலில் - தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பார்வையிட்டார்!

உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு ஒலுவிலில் - தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பார்வையிட்டார்



(எஸ்.அஷ்ரப்கான்)
அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர, கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ் ஷெய்க் யூ.கே. அப்துர் ரஹீம் (நளிமி) தலைமையில் (17) நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் இன்று (19) இறுதி நாள் நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஷ் அபூபக்கர் கலந்து கொண்டு பார்வையிட்டதுடன், மாணவர்களின் விளக்கங்களை செவிமடுத்து மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இங்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரமீஷ் அப்துல்லா பாடசாலையின் அதிபர் யு.கே. அப்துர் ரஹீம் மற்றும் பிரதி அதிபர் எம். ஏ. கமருன் நிஷா, உதவி அதிபர்களான ஐ.அஹமட் ஜூமான், ஜே.வஹாப்தீன் உட்பட பாடசாலையின் கணித, விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களான எம்.ஏ.சி.எம். இஹ்சாஸ், எம்.எஸ்.உஸாமா, எம்.ஐ.முஸ்பிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்

No comments: