News Just In

7/19/2024 05:01:00 PM

சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால் மர நடுகை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான உலகத்தை வழங்கவும் ஒரு முக்கியமான படியாக அமைந்தது.

இந்நிகழ்வில் அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் பிரதி அதிபர் ரீ.கே.எம்.சிராஜ் , ஆசிரியர் ஆலோசகரும், சாய்ந்தமருது கோட்டத்துக்கான சுற்றாடல் முன்னாடி கோட்ட ஆணையாளருமான எம்.எம்.சியாம் , ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments: