News Just In

3/18/2024 10:00:00 AM

"வாழ்வு சுமந்த வலி" நூல் வெளியீட்டு விழா!



அபு அலா

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவை. மு.தயாளனின் "வாழ்வு சுமந்த வலி" நூல் வெளியீட்டு விழா இன்று (17)திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக மேனாள் வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் நிலாவெளியூர் கெஜதர்மா, ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன், வைத்தியர் சி.ஹயக்கிரிவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நூலின் முதற்பிரதியை வைத்தியர் சி.ஹயக்கிரிவன் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய வட்ட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

No comments: