News Just In

2/15/2024 05:29:00 AM

வியாழேந்திரன் - பிள்ளையான் போன்ற நடிகர்களுக்கு வாக்களித்து ஏமாற்றமடைந்த மக்கள்: சாணக்கியன்



நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. வியாழேந்திரன் மற்றும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்களுக்கு வாக்களித்து மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று  (14.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“யானை வேலிகள் அமைக்கப்படாமையினால் இலட்சக்கணக்கான விவசாயிகளின் காணிகள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவதோடு விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை இழக்கின்றார்கள்.

இவ்வாறான மக்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதோடு வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு வாக்களித்த மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments: