தமது பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சர் எழுத்துமூல அறிவிப்பை வெளியிடும் வரையில் தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று (13) காலை 6.30 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: