News Just In

2/19/2024 05:43:00 AM

அரசியல் மயமாகும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர் இடமாற்றம்!




ஆசிரியர் இடமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களின் மேன்முறையீட்டை கவனத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்திற்குள் இடமாற்றத்தை மேற்கொள்வதற்குரிய முயற்சிகளை எடுப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார.

இடமாற்றப் பட்டியலை இரத்துச்செய்யும் போது ஏற்கனவே அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேயும், அம்பாறை மாவட்டத்தில் சுமார் 07 வருடங்களுக்கு மேலாக வெளி வலயங்களிலும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களை அவர்களின் சொந்த வயலங்களுக்கு இடமாற்றம் செய்வதில் பாரிய சிரமங்களை ஏற்படவுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவலை தெரிவித்துள்ளார்.

 மாகாணக் கல்விப் பணிப்பாளரின் இந்த கவலை நியாயமானதாகும். கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறும், மாணவர்கள் பாதிக்கப்படாதவாறும், நீண்ட காலமாக வெளி வலயங்களில் கடமையாற்றுகின்றவர்களை அவர்களின் சொந்த வயலங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்ற நியாயத்தை நிறைவேற்றுவது என்பதும், அரசியல்வாதிகளின் அரசியல் இலாபத்தை பிரதான நோக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நியாயத்தை மேற்கொள்வது என்பது மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது  என்பதில் ஐயமில்லை.

No comments: