News Just In

1/03/2024 11:39:00 AM

மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !




நூருல் ஹுதா உமர்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாவதையிட்டு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (03) முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்சத் காரியப்பர் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள பணியாளர்கள் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை வளாகங்களையும் சுத்தப்படுத்தும் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அறிவுறுத்தலுக்கமைய, உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்த அவர் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது. இந்நிலையில், நுளம்புப் பெருக்கத்துக்கு சாதகமான சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாவதையிட்டு சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்சத் காரியப்பர் அவர்களுக்கும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள பணியாளர்கள் எல்லோருக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். நபார் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


No comments: