News Just In

1/03/2024 11:42:00 AM

க.பொ.த உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்படும் மாற்றம்: பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு!




க.பொ.த உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முறை ஒரு புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சில வலைத்தளங்கள் இந்த அட்டவணையைக் காட்டக்கூடும்.

பரீட்சார்த்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிப்பத்திரத்தில் காட்டியுள்ளோம். அதனால் வேறு எங்கும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments: