News Just In

1/10/2024 03:46:00 PM

வெள்ளத்தில் மூழ்கியமட்டக்களப்பு ரயில் நிலையம்!




மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பாதை ஊடான ரயில்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கான இரவு தபால் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.








No comments: