News Just In

1/10/2024 03:50:00 PM

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்





யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அதன்படி முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்திலேயே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டிருந்தவர்கள், சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: