News Just In

1/31/2024 09:52:00 AM

சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!




(சர்ஜுன் லாபீர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(30) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீகின் ஏற்பாட்டில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ ஹமீட்,கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் இணைப்பாளர் ஏ.ஏ அஸாம், திணைக்களங்களின் பிரதிநிதிகள்,பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: