News Just In

1/31/2024 08:01:00 AM

மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லாததால் மாணவியொருவர் தற்கொலை!

பதுளை,புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, கணிதப் பாடத்திற்காக மேலதிக வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டுள்ளார்.

எனினும் அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக அதற்கு பணம் திரட்டிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

No comments: