News Just In

7/01/2023 12:30:00 PM

மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு





இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார்.

மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது

No comments: