News Just In

7/01/2023 03:10:00 PM

சவூதி அரேபியாவில் உயர் வெப்பத்தால் வளைந்து போயுள்ள பேனா!

கடுமையாக வளைந்து போயுள்ள பேனா ஒன்றின் புகைப்படத்தையே இங்கு காண்கிறோம். இன்றைய தினம் சவூதி அரேபியா- ரியாத் நகரின் வெப்பநிலை 45° ஆகும்.

கடுமையான இந்த வெப்பத்தின் காரணமாக காருக்குள் வைக்கப்பட்டிருந்த பேனாவே இப்படி ஆகியுள்ளது.

சவூதி அரேபியா, குவைத்,கடார், எமிரேட்ஸ் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரியும் உங்களது சொந்தங்களின் நிலையை சற்று நினைத்துப் பாருங்கள்.

இரத்தம், சதை, தோலால் ஆன உயிருள்ள ஜீவன்கள் அவர்கள். உங்களுக்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்களது உடல் வலியும் மன வேதனையும் உங்களுக்குப் புரியும்.

கடுமையான இந்த வெப்பத்தில்தான் உங்களுக்காக, உங்களது படிப்புக்காக, எதிர்கால வாழ்வுக்காக எல்லா வலிகளையும் மறந்து உழைக்கின்றனர்; கஷ்டப்படுகின்றனர்.

ஒன்றல்ல இரண்டல்ல இருபது வருடங்களாக இவ்வாறு உழைப்போரும் உள்ளனர்.

வெளிநாட்டு வாழ்கை சுகமென்று நினைக்கிறோம். அது பேராட்டக் களம். அவர்கள் அனுப்பும் பணம் வெறும் காகிதமல்ல. அது அவர்களது ரத்தம் கலந்த உழைப்பு. அது அவர்கள் மீது பட்ட வெப்பத்தின் அடையாளம் என்பதை மறவாதீர்கள்.

அந்தப் பணத்துக்காகத்தான் மனைவி, பிள்ளைகள், இல்லற வாழ்வு என அனைத்தையும் தியாகம் செய்திருக்கின்றனர்.

சொல்லொணா துயரம் நெஞ்சை பிளக்க, படாத பாடுபட்டு உழைத்து மாத இறுதியில் அவர்கள் அனுப்பும் பணத்தை இங்கு எந்த கஷ்டமுமின்றி செலவழிக்கும் உறவுகளே!

சுகமாக சுற்றித்திரியும் பிள்ளைகளே! சிந்தியுங்கள். அந்தப் பணத்தில் ஆடம்பரம் செய்வதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்.

வெப்பத்தினால் சுடுபட்ட அவர்களது உள்ளங்களை குளிர வையுங்கள். அதுதான் நீங்கள் அவர்களுக்கு செய்யும் கைமாறு.

- பாஹிர் சுபைர் -

No comments: