News Just In

6/23/2023 05:25:00 PM

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் நேற்று ஆரம்பம்.!


கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம் காத்தான்குடியிலும்   நேற்று ஆரம்பம்.




கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைவிரல் அடையாளம் எடுக்கும் பணி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைவிரல் அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் நேற்று(22) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர் கே சித்ரா உட்பட நிருவாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கடவுச்சீட்டு பெறுவதற்கு பதிவு செய்தவரின் புகைப்படம் மற்றும் கைவிரல் அடையாளம் என்பன எடுக்கப்பட்டு கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் ஆகியோரிடம் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம் விண்ணப்பதாரியினால் ஒப்படைக்கப்பட்டு இப் புதிய நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


No comments: