News Just In

6/23/2023 09:19:00 AM

ஐந்து வயது சிறுவனை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை!

5 வயது சிறுவனை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை: திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு



திருமலை திருப்பதியில் 5 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

ஆனால் திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதைகள் மலைப்பாதைகள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அடிக்கடி வனவிலங்குகளை எதிர் கொள்கின்றனர், அதிலும் குறிப்பாக சிறுத்தைகளை பக்தர்கள் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது.


இந்நிலையில் 22ம் திகதி இரவான நேற்று, திருப்பதி அலிபிரி மலைப்பாதையின் 7வது மைல் பிரிவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே 5 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கியது.

இதனால் சிறுவனுக்கு முகம், கை, கால் என அனைத்திலும் ரத்தம் கொட்டியது, மேலும் சிறுவன் வலியால் அலறி கத்தி கூச்சலிட்டான். ஆயினும் சிறுத்தை விடாமல் சிறுவனின் தலையை தனது வாயில் கவ்விக் கொண்டு காட்டுக்குள் ஓடியது.



சிறுவனின் கதறல் சத்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுத்தையிடம் இருந்து சிறுவனை காப்பாற்றுவதற்காக கத்தி கூச்சலிட்டனர்.

மேலும் அப்போது அங்கிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கத்திக் கூச்சலிட்டு கொண்டே சிறுத்தை விடாமல் காட்டுக்குள் துரத்தினர்.



இதனால் பீதியடைந்த சிறுத்தை சிறுவனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவனை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து பலத்த காயமடைந்த சிறுவனின் உயிருக்கு எத்தகைய ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: