News Just In

2/09/2023 02:00:00 PM

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகள் உறவினர்கள்!




நாட்டிலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளில் விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகளை புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

இந்த தேர்தல் வேட்பாளர்களில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

டுபாய்க்கு தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாசிக்கின் மகன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்கிஸ்ச தொகுதியில் போட்டியிடத் தயாராகி வருகிறார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பண சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவராகும்.

மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தெமட்டகொட ருவானின் மகன் தொடர்பிலேயே தற்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், காலியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தென்னிலங்கை தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான ரத்கம விதுர என்ற பாதாள உலகக் குற்றவாளியின் பிரதான உதவியாளராகும். அவர் புலனாய்வு அமைப்புகளில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட இவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments: