News Just In

4/14/2022 06:05:00 PM

அராஜக நிலைக்குள் நாடு- எவ்வாறு மக்களுக்கு வாழ்த்துக் கூறமுடியும்!

நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் புறக்கணித்து மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, அராஜக நிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இந்தப் போராட்டம் மூலம் வன்முறைக்குப் பதிலாக அமைதியையும், வெறுப்புக்குப் பதிலாக அன்பையும் பார்க்கலாம். அந்தப் போக்கின் மூலம் நாடு நல்ல வெற்றியைப் பெற முடியும்.

நாட்டின் எதிர்காலத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்கள் அனைவருக்கும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வளமும், ஆரோக்கியமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் வளமும் மிக்க புத்தாண்டாக அமையட்டும். இந்த நெருக்கடியை சமாளித்து அமைதி, சகவாழ்வு மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: