நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மற்றும் மாலை 04.30 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
3/23/2022 09:23:00 AM
நாட்டில் இன்றும் மின்வெட்டுஅமுல் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: