News Just In

3/23/2022 09:19:00 AM

. இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருது!



பைஷல் இஸ்மாயில் -
மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனை பிரதேசத்தைக் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் 2019 - 2020 இற்கான தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருது நேற்று (22) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விருது துறைசார்ந்த விஷேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ நேர்காணல் தொகுப்புக்கள், மூலிகையின் மருத்துவப் பயன்கள் பற்றி பத்திரிகையில் எழுதி வந்தமைக்காகவே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



No comments: