News Just In

10/30/2021 01:50:00 PM

தேசியப் பாடசாலை இடமாற்றச் சபையைக் கூட்டாமையால் ஏற்படுகின்ற தற்போதைய பிரச்சினைகள்!

தேசிய பாடசாலை இடமாற்றச் சபையைக் கூட்டமைப்பினால் தற்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மேலும் கடிதத்தில் உள்ளடங்கிய விடயங்களாக,
01)கல்வி அமைச்சினால் நிறுவனச் செயற்பாடுகள் தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோதும் நாடு பூராகவும் பாடசாலைகள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும்போதும் தேசியப் பாடசாலை ஆசிரிய இடமாற்றச்சபையைக் கூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படாமை காரணமாக உங்களுக்கு எமது சங்கத்தின் எதிர்ப்பினைத் தெரிவிக்கிறோம்.

02)தேசியப் பாடசாலை இடமாற்றச் சபையை அழைத்து அங்கு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளாத தேசியப் பாடசாலை ஆசிரிய இடமாற்றப் பணிப்பாளர் உட்பட்ட உங்கள் அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் கீழ்காணும் முறைகேடுகள் இடம்பெறுவதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
  1. அரசியல் அழுத்தம் மற்றும் நெருக்கத்தினால் ,சுய நெருக்கத்தின் அடிப்படையில் ஆசிரிய இடமாற்றம் நடைபெறுகின்றமை.
  2. பல இடமாற்றங்கள் உரிய தகைமையுடன் காணப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுக்க முடியுமாக இருந்தும் அவற்றைப் புறந்தள்ளியிருத்தல்.
  3. இடமாற்றமானது ஒரு பாடசாலைக்குப் பாதகம் ஏற்படாத வகையில் பெற்றுக் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் தவறு செய்தவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்வரை இடமாற்றம் வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் வகையில் ஆசிரியர்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகள் நிகழ்கின்றமை.
  4. இடமாற்றம்கோரி ஆசிரிய இடமாற்றப் பிரிவுக்கு வரும் ஆசிரியர்களுக்கு உங்கள் அதிகாரிகள் ஆசிரியர்களின் கௌரவம் மற்றும் அபிமானம் அற்றுப்போகும் வகையில் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுதல்.
03) இவ்வாறான நிலைமைகளின் கீழ் சாதாரணமாக ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறுவதில்லை அரசாங்கத்தின் அரசியல் நெருக்கம் மற்றும் உங்கள் அதிகாரிகளின் சுய நெருக்கத்தினால் ஆசிரிய இடமாற்றம் நடைபெறுகிறது எனவும் அவ்வாறான தொடர்புகள் இல்லாத பெருமளவான ஆசிரியர்கள் ஆசிரிய இடமாற்றத்தின்போது உங்கள் அதிகாரிகளின் அவமதிப்புக்களுக்கும் , அவமானப் படுத்தல்களுக்கும் ஆளாகவும் அந்த ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பப்படிவம் ,மேன்முறையீடு அடங்கிய ஆவணங்கள் தவறான இடங்களுக்கு மாறிச் செல்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

04) இது மிகவும் கூடாத மிகவும் அருவருக்கத் தக்க நிலைமை என்றும் தேசியப் பாடசாலை இடமாற்றச்சபையை உடனடியாகக் கூட்டி இடமாற்றமானது சட்டத்துக்கு உட்பட்டவகையில் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு இடம்பெறத் தவறும் பட்சத்தில் இவ்வாறான அநீதியான நிலைமைகளுக்கு எதிராக சங்க மற்றும் சட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய நிலை எழும் என்பதனை அறிவிக்கிறோம். என்ன கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க கையொப்பமிட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

எஸ். பிரதீப் 




No comments: