News Just In

10/30/2021 02:05:00 PM

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு 273 புதிய வேலை கடிதங்களை இன்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழங்கி வைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கமைய ஒரு இலட்சம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர சித்தியற்றவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் விஷேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தொழில் வாய்ப்பாக 273 பேருக்கு தொழில்வாய்ப்பு நியமனங்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று வழங்கி வைத்தார். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரம் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் மட்டக் களப்பு தேவநாயகம் கூட்டுறவு கலையரங்கில் இந்த நியமனம் வழங்கும் விசேட நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை, ஏறாவூர்பற்று, மண்முனை மேற்கு - வவுணதீவு, கோரளைப்பற்று - வாழைச்சேனை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் 273 பேருக்கு இந்த நியமனக் கடிதம் இன்று வழங்கிவைக்கப்பட்டது. ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இங்கு கருத்து வெளியிடுகையில்;-பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரச தொழில் வாய்ப்புக்களை தேர்தல் வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதர தகமையற்ற சுமார் 1000 இளைஞர் யுவதிகளுக்கு இந்த இரண்டாம் கட்ட தொழில் வாய்ப்பு  நியமனம் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலாளர் எஸ். ராஜ்பாபு, கோரளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். தனபாலசிங்கம், வவுணதீவு பிரதேசசெயலாளர் எஸ். சுதாகரன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனகௌரி தினேஷ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தமிழ் முற்போக்கு கழகத்தின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் இங்கு கலந்து கொண்டனர்.

(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)





No comments: