News Just In

11/11/2020 06:36:00 PM

மட்டக்களப்பு- திருப்பெருந்துறை பிள்ளையார் கோவில் வீதியினை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்...!!


துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருப்பெருந்துறை பிள்ளையார் கோவில் வீதியானது கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக திருப்பெருந்துறை ஐந்தாம் குறுக்கு, பிள்ளையார் கோவில் வீதியானது கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 19ஆம் வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இவ் வீதியின் அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், திருப்பெருந்துறை பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தாகவும், தற்போது இவ் வீதியை புனரமைத்து தந்த மாநகர முதல்வருக்கும் குறித்த வட்டார உறுப்பினருக்கும் குறித்த வட்டார பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.









No comments: