News Just In

8/21/2026 01:29:00 PM

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்



மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்

தாக்குள்ளானவர்கள்பலத்தகாயங்களுடன்சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: