
2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் உள்ளிட்ட விபரங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள எண் 31/2026-ஐ சுற்றறிக்கையில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.
பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணை
இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை
முதலாம் தவணை 2027 ஜனவரி 4 (திங்கட்கிழமை) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணை 2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறவுள்ளது.
மூன்றாம் தவணை 2027 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான அறிவிப்பு
முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை - 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன.
மேலும், சிறப்பு காரணங்களுக்காக ஒரு நாள் பாடநாலை மூடப்பட நேர்ந்தால், அதற்குப் பதிலாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments: