News Just In

8/19/2026 07:16:00 PM

அம்பாரை,திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்காக சதுரங்கம் மற்றும்கரம் விளையாட்டு போட்டிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

அம்பாரை,திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்காக சதுரங்கம் மற்றும்கரம் விளையாட்டு போட்டிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு


மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச்சங்கத்தின்(EDS) உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் கரம்,சதுரங்கம் விளையாட்டு போட்டிகளுக்கான
விண்ணப்ப திகதி 23/08/2026 வரைநீடிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக்குழுத்
தலைவர் சிதம்பரநாதன் நிதர்சன் தெரிவிக்கிறார்.கிழக்கு மாகாணத்தின் ஏனையமாவட்டங்களான அம்பாரை,திருமலை மாவட்ட பெற்றார்களின் வேண்டுகோளுக்கமைய கால நீடிப்புமேற்கொள்ளப்பட்டதாக மேலும்
அவர் தெரிவித்தார்.

குறித்த வயதெல்லைகளுக்கான விண்ணப்பங்களை உடனடியாக
அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டுகுழுவினர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) உள்ளக விளையாட்டுக் கழகத்தால் சதுரங்கம் (Chess) மற்றும் கரம் (Carrom) விளையாட்டுக்களின் சுற்றுப்போட்டி EDS இன் டென்மார்க் (Denmark) கிளையின்நிதிஅனுசரனையுடன்ஆவணிமாதஇறுதிவாரத்தில்நடாத்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் கோரப்பட்டு ( ஒருவர் ஒரு போட்டியில் ( அதாவது சதுரங்கம் அல்லது கரம் ) மாத்திரமே விளையாட முடியும்)

A.சதுரங்கம்
1. பாடசாலை மாணவர்கள்
a  15 வயதுக்கு கீழ் ( 7, 9, 11, 13, மற்றும் 15 வயது பிரிவுகள்)
 b  15 வயத்துக்கு மேல்
2. EDS பழைய மாணவர்கள்
3. ஏனையவர்கள்

போட்டிகள் 15 வயதுக்கு கீழான திறந்த போட்டிகள் மற்றும் 15 வயதுக்கு மேலான திறந்த போட்டிகள் என்ற அடிப்படையில் நடாத்தப்படும்

பரிசில்கள்
1. 15 வயத்துக்கு கீழ் ( 7, 9, 11, 13, மற்றும் 15 வயது பிரிவுகள்)
a. ஒவ்வொரு வயது பிரிவிற்கும், 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண் கலம் என்ற வகையில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும்.
b. ஒவ்வொரு வயது பிரிவிற்கும் ( 7, 9, 11, 13, மற்றும் 15 வயது பிரிவுகள்), ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவாக 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்றவர்களுக்கு ரூபா. 5,000.00, ரூபா. 3,000.00, மற்றும் ரூபா. 2,000.00, என்ற வகையில் பணப் பரிசில்களும் வழங்கப்படும்.
c. 15 வயத்துக்கு கீழ் ஒட்டுமொத்தமாக, ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவாக 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்றவர்களுக்கு ரூபா. 15,000.00, ரூபா. 10,000.00, மற்றும் ரூபா. 5,000.00, என்ற வகையில் பணப் பரிசில்களும் 1ம் இடத்தை பெறுபவருக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.

2. 15 வயத்துக்கு மேல்
a. 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண் கலம் என்ற வகையில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும்.
b. EDS பழைய மாணவர்களுள் 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலம் என்ற வகையில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும்.
c. 15 வயத்துக்கு மேல் ஒட்டுமொத்தமாக, ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவாக 1ம், 2ம் மற்றம் 3ம் இடங்களைப் பெற்றவர்களுக்கு ரூபா. 15,000.00, ரூபா. 10,000.00, மற்றும் ரூபா. 5,000.00, என்ற வகையில் பணப் பரிசில்களும் 1ம் இடத்தை பெறுபவருக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.

B. கரம்
1. 15வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம்
2. போட்டிகள் 15வயதுக்கு கீழான திறந்த போட்டிகள் என்ற அடிப்படையில் நடாத்தப்படும்
3. பரிசில்கள்
a. 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெ
ண்கலம் என்ற வகையில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படுவதுடன்
b. 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பெற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் ரூபா. 7,500.00, ரூபா. 5,000.00, மற்றும் ரூபா. 3,000.00, என்ற வகையில் பணப் பரிசில்களும் வழங்கப்படும்.

விண்ணப்பம்
1. விண்ணப்பங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வன்பிரதியை பூர்த்தி செய்து விண்ணப்ப முடிவு திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்க கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும் அல்லது வழங்கப்பட்டுள்ள இணைப்பினூடாக நிகழ்நிலை படிவத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.
2. நுழைவுக் கட்டணம் ரூபா. 500.00
 கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டு விண்ணப்பத்துடன் அல்லது நிகழ்நிலை படிவத்தில் இணைத்தல் வேண்டும்.

தொடர்புகளுக்கு :
A.சதுரங்கம்
சிதம்பரநாதன் நிதர்சன் (தொலைபேசி இல: 075-8022779)
வர்ணகுலசிங்கம் கமலதாஸ் (தொலைபேசி இல: 077-7679596)
இராசதுரை கரிகாலன் (தொலைபேசி இல: 075-6721767)

B.கரம்
கோபாலப்பிள்ளை சாத்வீகன் (தொலைபேசி இல: 075-4258578
இராசதுரை கரிகாலன் (தொலைபேசி இல: 075-6721767)

ஒரு போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூபா. 500.00.
வங்கிக் கணக்கின் பெயர் - M.கஜரூபன்
வங்கிக் கணக்கு இலக்கம் - 8105048532
வங்கி - கொமர்சியல் வங்கி ( Commercial Bank)
கிளை - மட்டக்களப்பு (Batticaloa)

போட்டியாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 23.08.2026 பிற்பகல் 4.00

vtnnewsinfo@gmail.com Switch accounts

The name, email address and photo associated with your Google Account will be recorded when you upload files and submit this form

* Indicates required question



No comments: