News Just In

11/07/2020 05:03:00 PM

வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு!!


வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மீரிகம– பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 68 வயதானவரே உயிரிழந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்குக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை புத்தளத்தில் நேற்றைய தினம், சுயதனிமைப்படுத்தலுக்காக வீடு திரும்பியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: