News Just In

11/07/2020 04:30:00 PM

மின்சாரம் தாக்கி 33வயதுடைய ஒருவர் பலி...!!


பலாங்கொடை-தலங்கம பகுதியில் உள்ள காணியொன்றில் விலங்குகள் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இன்று அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹவத்த-வெல்லந்துர பகுதியில் வசித்து வந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: