News Just In

11/07/2020 04:21:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்ட 200 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்ட இருநூறு பேருக்கு இன்று (7) சனிக்கிழமை பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் முதன்முதலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் குறித்த பள்ளிவாசலில் அன்றைய தினம் தொழுகையில் ஈடுபட்டதை தொடர்ந்து அப் பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர்களை அடையாளம் கண்டு சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்தனர்.

அந்தவகையில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து இருநூறு பேருக்கு இன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments: