News Just In

10/14/2020 11:39:00 AM

மரம் முறிந்து வீழ்ந்து இருவர் பலி- பலாங்கொடை பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!


பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக கடும் காற்று வீசிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: