News Just In

10/14/2020 11:57:00 AM

நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம்- கொழும்பு பொரளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!!


கொழும்பு- பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னதாக பொரளையில் அமைந்துள்ள இரு உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த சில நாட்களாக பொரளையில் அமைந்துள்ள குறித்த ஆறு கடைகளுக்கு சென்றதையடுத்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய ஆறு கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: