News Just In

10/14/2020 07:34:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனை வீதியில் விபத்து- இருவர் படுகாயம்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்றிரவு (13) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது அவ் வீதியால் வந்த மூன்று சக்கர சிறிய ரக வண்டி ஒன்று மோதியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதி விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: