News Just In

10/14/2020 06:45:00 PM

இரு பிள்ளைகளின் தாயார் தூக்கிட்டு தற்கொலை- வவுனியாவில் நடந்த துயரச் சம்பவம்!!


வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொல்லை யினால் இரு பிள்ளைகளின் தயார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 வயதுடைய பிள்ளைகளுடன் கணவர் அவரது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது தனிமையில் இருந்த பெண் தூக்கில் தொங்கியுள்ளார்.

காலை 8.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்றசமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நி லையில் சட லமாக காணப்படுவதனை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உ தவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்துடன் பொலி ஸாருக்கு தகவலை வழங்கினார்.

பொலிஸார் , தி டீர் மரண விசாரணை அதிகாரி உடனடியாக அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் விசாரணைக்காக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே இவ்வாறு சட லமாக மீட்கப்பட்டவராவார். தான் க டன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தற்கொலை செய்துகொண்டுள்ள பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: