இந்த விடயங்கள் பதுளை மாவட்டத்தில் பதிவாகி உள்ளதோடு பதுளை மற்றும் லுணுகலை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர்கள் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்.இதற்கு அரசியல் வாதிகள் உட்பட அவர்களின் ஆதரவாளர்களே காரணம் என பிரதீப் கூறுகிறார்.
மக்களின் அதிகூடிய ஆணையைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தலைமை தாங்கும் தங்கள் அரசியல் கட்சி உறுப்பினர்களால் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான செயற்பாட்டுகளை தடுத்து நிறுத்துவதோடு ஒழுக்கக் கட்டுப் பாடுகளை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறப்பாக அமையும் எனக் கூறுகிறார்.
ஆசிரியர்களை மண்டியிடவைத்த அரசியல் வாதிகளுக்கு கட்சியின் பிரதான விடயங்களை மேற்கொள்வதற்கான பதவிகள் கடந்த காலங்களில் வழங்கப் பட்டிருந்தன.கட்சிக்குள் இவ்வாறானஅரசியல் வாதிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமை இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதற்கான பிரதான காரணமெனக் கூறும் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறான அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக உடனடியாகச் செயற்பட்டு விடயங்களைச் சீர்செய்யுமாறு ஜனாதிபதியிடமும் ஏனைய கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
பதுளை மத்திய மகா வித்தியாலய அதிபர் புபுது ஜயசிங்க அவர்களை நேற்று முன்தினம்(11 ஆம் திகதி) தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன். இந்த நபர் அரசியல் வாதிகளுடன் நெருங்கிய உறவினைக் கொண்டவர் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறுகிறது.
S. Pradeep
0713280729
0773080729


No comments: