இப் போட்டியானது இன்றிரவு இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது.
அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள்.
முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின்வரிசையில் தடுமாறி விட்டனர். ஆனாலும் பந்து வீச்சு, துடுப்பாட்டம் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.
அதேவேளை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், வீரர் ரஸ்ஸல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் அநேகமானோர் உள்ளனர்.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் ஒன்றையொன்று எதிரத்தாடவுள்ளன
மும்மை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் மும்பை 19 போட்டிகளிலும், கொல்கத்தா 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட்டுக்கு இது 150 ஆவது ஐ.பி.எல் போட்டியாகும்.
இப் போட்டியில் ரோகித் சர்மா 90 ஓட்டங்களை குவித்தால் ஐ.பி.எல்.லில் அவர் 5000 ஓட்டங்களை பூர்த்தி செய்வார்.
அதேநேரம் ஐ.பி.எல்.லில் 1500 ஓட்டங்களை பூர்த்தி செய்ய குயிண்டன் டிகொக்கிற்க 11 ஓட்டங்களும் ரஸ்ஸலுக்கு 100 ஓட்டங்களும் தேவைப்படுகிறது.

No comments: