அரச சேவை அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ் ரூவான்சந்திர மற்றும் அவ் ஆணைக்குழுவின் தலைவர் தயா லங்காபுர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாயன்று 26.05.2026 இடம் பெற்றது.
மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறீகாந்த், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உயர் அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பொது அதிகாரிகளுக்கு அவர்களது கடமைகள் தொடர்பான தெளிவூட்டல்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
மேலும் தகவல்கள் வழங்கும் போது அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் அவற்றை கையாள்வதற்கான உபாயமுறைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் 2016ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டதுடன் இச் சட்டத்தின் மூலம் அரச நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பேற்பட்டது.
No comments: