News Just In

5/30/2026 07:59:00 AM

மட்டக்களப்பில் கார் விபத்து : சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் கார் விபத்து : சிறுவன் உட்பட நால்வர் காயம்



மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று(29.05.2026) பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகமாக சென்ற கார் வீதியை விட்டு விலகி கட்டுப்படுத்தமுடியாத நிலையில் மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்தவர்கள் உடனடியாக கல்லா வைத்தியசாலைக்கு அந்தப் பகுதியிலிருந்தவர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: